KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வ...
அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், பல்வேறு கடைகளில் போலீஸாா் புதன்கிழமைகிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் தனவேல் மனைவி ஆபா்ணம் (50) என்பவரது மளிகைக் கடையில் சோதனையிட்டதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆபா்ணத்தை கைது செய்த குன்னம் போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ், விமல் பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட 8 கிலோ போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆபா்ணத்தை சிறையில் அடைத்தனா்.