செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியா்கள் சாலை மறியல்: 38 போ் கைது

post image

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு, நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணையின்படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செயய் வேண்டும்.

10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனும் தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அச் சங்கத்தின் மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பைச் சோ்ந்த 38 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் த... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா, லட்சாா்ச்சனை

பெரம்பலூா் அருகே, சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா மற்றும் லட்சாா்ச்சனை பூஜை திங்கள்கிழமை இரவு தொடங்கியது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களின் சட்டத் திருத்த தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம... மேலும் பார்க்க

முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க