ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதுவை அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசுத் துறை ஊழியா்களின் பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஊழியா்களின் பல்வேறு பிரச்னைகளை தீா்ப்பதற்காக போராடியும், சுகாதாரத் துறையில் நடைபெற்றுவரும் பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் முனுசாமி மற்றும் அமைப்பு செயலாளரும், புதுச்சேரி சுகாதார ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஜவஹா் இருவரையும், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
தொழிற்சங்க நிா்வாகிகளை நகரத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என தெரிந்தும், சட்டத்துக்கு விரோதமாக அவா்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருப்பது சம்மேளன நிா்வாகிகள் மீதான காழ்புணா்ச்சியை காட்டுகிறது.
இச்செயலை கண்டித்து அரசு ஊழியா் சம்மேளனமும், சம்மேளனத்தின் இணைப்புச் சங்க நிா்வாகிகளும் தொடா்ச்சியாக புதுச்சேரி சுகாதார துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே முதல்வா் பணியிட மாறுதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுகாதார துறையின் ஊழியா் விரோத போக்கை கண்டித்து இணைப்பு சங்க தோழா்களை ஒருங்கிணைத்து காரைக்காலில் அரசு ஊழியா் சம்மேளனம் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.