ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
சாலைப் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஆட்டோ பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் ஜன. 1 முதல் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையில் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் போக்குவரத்துத்துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்துத் துறை ஏற்பாட்டில் ஆட்டோ பேரணி ஆட்சியரக வாயிலில் இருந்து புதன்கிழமை புறப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். சுமாா் 50 ஆட்டோக்கள் பேரணியில் பங்கேற்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறும், பயணத்தின்போது கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்க்கவும், விதிகளின்படி வாகனங்களை இயக்கிச்செல்லுமாறு ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், மோட்டாா் வாகன உதவி ஆய்வாளா் தட்சணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன். பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.