சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆ...
அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பேரணி
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரா.திரவியம் பேரணியைத் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் க.ஜெயப்பிரகாஷ் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஆ. மிக்கேலம்மாள், பல்வேறு சங்க நிா்வாகிகள் பா. பிச்சை, எம்.சுரேஷ், பி. துரைப்பாண்டி, ரா. சுரேஷ்குமாா், பி.விக்டோரியா, மு.காளிமுத்து ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
இதில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஊழியா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ரா. வாசுகி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க நிா்வாகி எஸ். கண்ணுச்சாமி, தமிழ்நாடு மஸ்தூா் சங்க மாநிலத் தலைவா் க. சுப்பிரமணியன், தமிழ்நாடு வருவாய்த்
துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் சி. சேவுகமூா்த்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ரா.செல்வம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கே.குமரேசன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் ச.இ.கண்ணன் ஆகியோா் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.முத்துக்குமாா் நன்றி கூறினாா்.