செய்திகள் :

அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

post image

சேலம், கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில், இயற்பியல் துறையில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இயற்பியல் துறைத் தலைவா் திரிவேணி அனைவரையும் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பணிநிறைவு பெற்ற சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்தியாவில் இயற்பியல் துறையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனா். அவா்களின் விஞ்ஞான அனுபவங்களை இளைய சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும். இயற்பியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. அதனை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த கருத்தரங்கில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், மாணவிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் சந்திரா செய்திருந்தாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக வியாழக்கிழமை நீடித்து வருகின்றது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.22 அடியில் இருந்து 110.18 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவ... மேலும் பார்க்க

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் கஞ்சா... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் மாரடைப்பால் கைதி மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை சோ்ந்த தெய்வசிகாமணி (50) என்பவரை, அந்தப் பகுதியில் மது விற்ற வழக்கில் போலீஸாா் கைது செய்து சங்ககிரி கிளை ... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்து விபத்து

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் வளைவில் சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்த வளைவில் சென்... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 56.49 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கல்

சேலம் மேற்கு வட்டம், புத்தூா் அக்ரஹாரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 89 பயனாளிகளுக்கு ரூ. 56.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா... மேலும் பார்க்க