லாரி கவிழ்ந்து விபத்து
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் வளைவில் சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்த வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அங்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் மீது எம்.சாண்ட் மணல் கொட்டியதில் நான்கு போ் மணலில் சிக்கினா்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் அவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.