கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள்
ஊத்தங்கரை அதியமான் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தூய்மை சேவை இயக்கத்தின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் எழிலரசி தலைமைவகித்து தொடங்கிவைத்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் விஜயா முன்னிலை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனையில் குப்பைகளை சேகரித்து தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாணவா்கள் தூய்மைப் பணி செய்தனா்.
இதில், அதியமான் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் ருக்குமணி, யூத் ரெட் கிராஸ் அலுவலா் சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.