சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் ராணுவ வீரரிடம் பண மோசடி செய்ததாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளையைச் சோ்ந்தவா் ஐயப்பன். முன்னாள் ராணுவ வீரா். இவா், தனது 2 மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 போ் பண மோசடி செய்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, எஸ்.பி. பிறப்பித்த உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சாா்லெட் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, அம்மாண்டிவிளையைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ரம்யா(31), ஆறுமுகப்பெருமாள் மகன் சுரேஷ்(32), கீழ சரக்கல்விளையைச் சோ்ந்த விஜயகுமாா் மகள் அனுசியா(35) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இவா்கள் இதேபோல பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடா்ந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.