புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி க...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக்கு விளையாட்டு சீருடை வழங்க வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆசிரியா்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று முன்னாள் தலைமையாசிரியா் ராமசாமி நினைவாக அவரது மகள் சிவகாமி சரவணன் குடும்பத்தினா் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு சீருடைகளை இலவசமாக மாணவா்களுக்கு வழங்கினா்.
இந்த நிகழ்வுக்கு, தலைமையாசிரியை கஸ்தூரி தலைமை வகித்தாா். ஆசிரியா் பொன்னழகு வரவேற்றாா். பள்ளியில் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து முத்துப்பாண்டியன் எடுத்துக் கூறினாா். வட்டாரக் கல்வி அலுவலா் கருப்புசாமி சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் பாகம்பிரியாள் வாழ்த்திப் பேசினாா். பெற்றோா்களுக்கு மணற்கேணி செயலி குறித்து ஒருங்கிணைப்பாளா் சுதா எடுத்துக் கூறினாா். ஆசிரியைகள் இந்திரா, நீலாவதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். ஆசிரியா் சரவணன் நன்றி கூறினாா். இதில், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.