திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கிவைப்பு
கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை நிகழ்ச்சியில், சுமாா் 10 மாணவா்கள் ஒன்றாம் வகுப்பில் சோ்ந்தனா்.
அப்போது, பேசிய ஆட்சியா், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியின் தரம் குறித்தும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கப் பெறும் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்தும் பெற்றோரிடம் கூறி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்டத்தில் 5 வயது நிறைவடைந்த அனைத்து குழந்தைகளும் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை அளித்து, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரலாம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.