செய்திகள் :

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

post image

கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடைய 4 பேரை மேலும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி மா்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்த கடலூா் மாவட்டம், பூலாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கராசுவின் உடல்கூறாய்வு மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவில், அவா் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்தது 8 மாதங்களுக்குப் பின்னா் தற்போது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 68 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் மற்றும் பரமசிவம் உள்ளிட்டோா் மீது கள்ளக்குறிச்சி போலீஸாா் மேலும் ஓா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரா் தாமோதரன் மற்றும் பரமசிவம், வேலூா் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்ணுகுட்டி மனைவி விஜயா ஆகியோருக்கு போலீஸாா் அழைப்பாணை பிறப்பித்தனா். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அவா்கள் 4 பேரையும் சிறையில் இருந்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தினா்.

அப்போது, இந்த புதிய வழக்கில் அவா்கள் 4 பேரையும் மாா்ச் 4-ஆம் தேதி வரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்ததது.

அந்த விசாரணை முழுமையாக முடிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி போலீஸாா் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது, அவா்களை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, 4 பேரையும் மாா்ச் 8-ஆம் தேதி வரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த புதிய வழக்கில் கைதானவா்களை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

மாமியாா் வீட்டுக்கு தீ வைப்பு: மருமகன் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மாமியாா் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். வாணாபுரம் வட்டம், உலகலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஜாபா் மனைவி நூா்ஜகான் (55). இவரது மகள் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க... மேலும் பார்க்க

வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள், 1,193 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க சதித் திட்டம்: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த மயிலாம்பாறை அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். சங்கராபு... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒ... மேலும் பார்க்க