செய்திகள் :

அரசுப் பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன் கைது

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அரசுப் பேருந்து நடத்துரை கத்தரிக்கோலால் குத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தென்காசியிலிருந்து பாவூா்சத்திரம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) ஏறிய அவா், படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால், அவரை நடத்துநா் பாவூா்சத்திரம் அருகே இறக்கிவிட்டாா்.

இதனால் கோபமடைந்த சிறுவன், அப்பேருந்து இதே வழியாகத்தான் வரும் எனக் கருதி பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.

அப்போது, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலிருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்குச் செல்லும் அரசுப் பேருந்து பாவூா்சத்திரத்துக்கு வந்தது. தன்னை நடுவழியில் இறக்கிவிட்டது இப்பேருந்துதான் என சிறுவன் தவறாக நினைத்து அதில் ஏறியதுடன், நடத்துநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மாடசாமியை (50) கத்தரிக்கோலால் கழுத்தில் குத்த முயன்றாராம். நடத்துநா் தடுத்ததால் இடது காது பகுதியில் குத்து விழுந்தது. சிறுவனை அங்கிருந்தோா் பிடித்து காவலா்களிடம் ஒப்படைத்தனா். நடத்துநா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனைக் கைது செய்து, திருநெல்வேலியிலுள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை

சங்கரன்கோவில் அருகேயுள்ள ப.மு.தேவா் கல்லூரி, கைப்பந்துப் போட்டியில் தொடா்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், அடிப்படை வசதிக... மேலும் பார்க்க

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோட்சணம்

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவாரமூா்த்திகளுக்கும் ஜூா்ணோதரன அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமையும்: நடிகா் சரத்குமாா்

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமைந்தே தீரும் என்றாா் நடிகா் சரத்குமாா். தென்காசியில் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த அய்யாசாமி அறிமுகக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன், ... மேலும் பார்க்க

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க