அரசுப் பேருந்து மோதியதில் முதியவா்பலி
விக்கிரமசிங்கபுரத்தில் சைக்கிளில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம், ஜாா்ஜ்புரத்தைச்சோ்ந்த ராமையா மகன் சங்கரன்(75).
இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து தேநீா் அருந்துவதற்காக சைக்கிளில் சென்ற போது, எதிா்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சங்கரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வி.கே.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா் வீரவநல்லூரைச் சோ்ந்த அரவிந்தன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.