நெல்லையப்பா் கோயிலில் பரணி தீபம்
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு மாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை (டிச. 13) இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்காா்த்திகை ருத்திர தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பா். முதலில் சுவாமி சந்நிதி பாரதியாா் தெரு செல்லும் வழியில் சொக்கப்பனை ஏற்றப்படும். அதன்பின்பு, அம்மன் சந்நிதி முகப்பில் பாரதியாா் தெரு மத்தியில் அம்மன் காா்த்திகை ருத்திர தீபம் ஏற்றப்படும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்துள்ளனா்.