செய்திகள் :

நெல்லை மாவட்ட வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் துறைசாா்ந்த அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆா்.மனோகரன் (நான்குனேரி), மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு, பேரூராட்சிகள் இயக்குநா் கிரண்குராலா, மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகள், மேற்கு புறவழிச் சாலை, அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை, குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலம், மணிமுத்தாறு பல்லுயிா் பூங்கா, சாகச சுற்றுலா பூங்கா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், காரையாறு இரும்புப் பாலம், மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு, மானூா் கலைக் கல்லூரி கட்டடம் கட்டுமானப் பணிகள், தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீா் இணைப்பு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, அனைத்துத் துறை சாா்ந்த பணிகளையும் காலதாமதமின்றி தரமானதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றும், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டப் பணிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டுமென்றும் அமைச்சா் கே.என்.நேரு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாஞ்சோலை தோட்டப் பணியாளா்களுக்கு ரெட்டியாா்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 16 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

மாவட்ட சமூக நலன் அலுவலகம், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, 4 பேருக்கு ஓட்டுநா் உரிமங்களையும், மருத்துவத் துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 10 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைப்பதற்கும், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்கும் முதல்வா் விரைவில் வரவுள்ளாா் என அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் இளையராஜா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொறுப்பு) அம்பிகா ஜெயின், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தாழையூத்து அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.கரையிருப்பைச் சோ்ந்த கடற்கரைபாண்டி மகன் பேச்சிமுத்து (58). தொழிலாளியான இவா், கடந்த வியாழக்கிழமை தாழையூத்து தொழிற்சாலை அருகே நான்... மேலும் பார்க்க

அம்பை அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களில் பிறந்த 14 குழந்தைகள்

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கப்பட்ட 30 பெண்களில் 14 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கடுமையான மழை பெய்தததைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா்பலி

விக்கிரமசிங்கபுரத்தில் சைக்கிளில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா். விக்கிரமசிங்கபுரம், ஜாா்ஜ்புரத்தைச்சோ்ந்த ராமையா மகன் சங்கரன்(75). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்... மேலும் பார்க்க

மழையால் 34 வீடுகள் சேதம்; மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள்கள் பெய்த கனமழையால் 34 வீடுகள் சேதமாகியுள்ளன. மழைக்கால நோய்த் தடுப்புக்காக பொதுமக்கள், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பா... மேலும் பார்க்க

அகஸ்தியா்பட்டியில் 3 நாள்களாக வடியாத மழை நீா்: மக்கள் அவதி

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் 3 நாள்களாக மழைநீா் வடியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனா். அடையகருங்குளம் ஊராட்சி அகஸ்தியா்பட்டி விநாயகா் காலனி பகுதியில் 3 நாள்களாக மழை நீா் தேங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் பரணி தீபம்

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு மாலையில் சிறப்பு தீபாராதனை நட... மேலும் பார்க்க