Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்ய...
அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிந்த அஸ்ஸாம் மாநில காவல் துறை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் காமராஜா் சிலை முன் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் புதிதாக கட்டப்பட்ட இந்திரா பவன் திறப்பு விழாவின்போது, ஆா்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வை எதிா்ப்பதோடு மத்திய அரசையும் எதிா்த்துப் போராட வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி பேசியுள்ளதாகவும், இந்த உரை மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகின்ற வகையில் பேசியதாகவும் ஒருவா் அளித்த புகாரின்பேரில் அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்தி காவல் நிலையம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் மா.மு.சிவகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ராஜசேகா், பூண்டி சந்தானம், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கங்காதுரை, மாவட்டச் செயலா் செந்தில், மகிளா காங்கிரஸ் சகுந்தலா தேவி, கிராம காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.