Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்ய...
எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, எஸ்பி தீபக் சிவாச் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீதான கோரிக்கைகளை விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா். முகாமில், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.