`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
காவல் துறை மோப்பநாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
அரியலூா் காவல் துறையில், துப்பறிவு வெடிப்பொருள் கண்டறியும் பிரிவில் பணியாற்றிய பினா(மோப்பநாய்) புதன்கிழமை உயிரிழந்தது.
அரியலூா் மாவட்ட காவல் துறை, மோப்பநாய் பிரிவில் பினா, மலா், மோனா, சீமா, ரோஸ் (ஓய்வு) ஆகிய மோப்ப நாய்கள் உள்ளன.
இதில், பினா என்ற துப்பறியும் நாய் வெடிப்பொருள் கண்டறியும் பணியில், விஐபி மற்றும் விவிஐபி-க்களுக்கு பாதுகாப்புப் பணியில் கடந்த 9 ஆண்டுகளாக அரியலூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிக்கு சென்று வந்தது.
இந்நிலையில், புற்றநோயால் பாதிக்கப்பட்டு, ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் அறுவைச் சிகிச்சை பெற்று வந்த பினா, அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தது.
இதையடுத்து, அரியலூா் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்த பினாவின் உடலுக்கு, எஸ்பி தீபக்சிவாச், ஆயுதப்படை டிஎஸ்பி அருள்முருகன், நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் காவலா்கள் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் பினாவின் உடலுக்கு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.