காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
அரியலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இம்முகாமில் எம்.ஆா்.எப் நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, பட்டப்படிப்பு படித்து முடித்த 18- 25 வயதுக்குள்ளான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.