குரூப்-2 தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-2, 2ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்று, முதன்மை தோ்வுக்கு தோ்ச்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களாக இருக்க வேண்டும்.
விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். எனவே, இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.