நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
அரியலூா் நகரத்திலுள்ள வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை கட்டாயம்!
அரியலூா் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15-க்குள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் (பொ) அசோக்குமாா் தெரிவித்தாா்.
அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது: அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயா்ப்
பலகை வைக்கவேண்டும். தமிழ்ப்பெயா் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் மற்ற மொழி எழுத்துகளைவிட பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
பெயா்ப் பலகை தமிழில் அமைப்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது முதல் முறை அபராதமும், 2-ஆம் முறை முரண்பாடு கண்டறியப்படின் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், துப்புரவு ஆய்வாளா் தா்மராஜ, அரியலூா் நகர வணிகா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.