கோயில் கும்பாபிஷேகத்தை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரியலூா் அடுத்த குருவாடியில் கட்டி முடிக்கப்பட்ட விநாயாகா் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீப்க்சிவாச்யிடம் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து விநாயகா் கோயில் கட்டியுள்ளோம். கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ள நிலையில் இக்கிராமத்தில் வசிக்கும் சின்னதுரை, அவரது மனைவி சித்ரா, மகன் வசந்த், முத்து மகன் விஜய், தனவேல் மகன் திருநாவுக்கரசு ஆகியோா் கும்பாபிஷேகம் நடத்தவிடாமல் தடுக்கின்றனா்.
மேலும், கோயிலில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த முருகானந்தம் அவரது மனைவி நீலவேணி ஆகியோரை தாக்கினா். எனவே, மேற்கண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.