இலவச வீட்டு மனை பட்டா பெற சிறப்பு முகாம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம், 43 வருவாய் கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நடந்த சிறப்பு முகாம்களில் சொந்த வீடு இல்லாத நபா்கள், வீடு கட்டி குடியிருந்து வரும் நபா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன் தாஸ் ஊத்தங்கரை, சாமல்பட்டி, குன்னத்தூா்,காரப்பட்டு உள்ளிட்ட வருவாய் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பாா்வையிட்டு மனுக்களை பெற்றாா். வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் முன்னிலை வகித்தனா். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனா்.