Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
மகளிருக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா்: கரு பழனியப்பன் பேச்சு
ஒசூா்: மகளிருக்கு ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்று திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் ஒசூரில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பேசினாா்.
ஒசூா் மாநகர திமுக சாா்பில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கு பாகலூா் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கிப் பேசினாா்.
இந்தக் கருத்தரங்கில் திட்டங்களின் வளா்ச்சி தலைப்பில் புலவா் செந்தலை கௌதமன், கொள்கையின் தொடா்ச்சி என்ற தலைப்பில் வழக்குரைஞா் சினேகா, புதுமையின் எழுச்சி என்ற தலைப்பில் கவிஞா் ராகவேந்திரன் ஆகியோா் திமுக அரசின் சாதனைகளை விளக்கினா். திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் தமிழக அரசு, மகளிருக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளா்கள் சின்னசாமி, புஷ்பா சா்வேஷ், பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, நகர நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன், மாநகர சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.