அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!
முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், பாக். அணி நியூ. அணியிடம் தோல்வியடைந்தது.
இன்று, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டாவது போட்டி துவங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி 50 ஓவர்கள் முடிவில் 304 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க: ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா: ரோஹித் விஸ்வரூபம் 119, இங்கிலாந்து 304/10, இந்தியா 308/6
அதிகபட்சமாக, அறிமுக ஆட்டக்காரரான மேத்யூ பிரெட்ஸ்கீ 148 பந்துகளில் 150 ரன்களை அடித்து அசத்தியதுடன் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/mypz0wvf/GjafveZaAAAXJEU.jpg)
1978 ஆம் ஆண்டு மே.இ.தீவுகளின் அன்றைய தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆண்டிகுவாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 148 ரன்களை எடுத்ததே அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது, 47 ஆண்டுகளுக்குப் பின் பிரெட்ஸ்கீ இந்தச் சாதனையை உடைத்துள்ளார்.
26 வயதான பிரெட்ஸ்கீ தன் அறிமுக ஆட்டத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.