குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடர் இழப்பை தவிர்க்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.
இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக டாம் பாண்டான், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேக்கோப் பெத்தேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் டாம் பாண்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் டாம் பாண்டான் இங்கிலாந்து அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 134 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்சம் 58 ரன்கள் ஆகும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.