குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா
உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதையும் படிக்க: கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!
டெம்பா பவுமா கூறுவதென்ன?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடரில் உங்களுக்கு தோல்வியிலிருந்து மீண்டு வர நேரம் இருக்கும். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறுகிய கால தொடர் என்பதால், அணி தோல்வியைத் தழுவினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம். வெளிநாடுகளில் விளையாடுவது புதிய வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த தென்னாப்பிரிக்கா!
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரில் விளையாடுவதால், இங்குள்ள மைதானங்களின் தன்மைக்கு ஏற்றவாறு புதிய வீரர்கள் தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார்கள். கேசவ் மகாராஜ் மற்றும் ஷம்சி இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்க உள்ளனர் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.