'ரூ.12 லட்சத்திற்கு உயர்ந்த வருமான வரி சலுகை வரம்பு' - 'இந்த' 5 விஷயங்களை கட்டாய...
ரோஹித், கில் அதிரடி: 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரை வென்றது இந்தியா!
கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது போட்டி ஒடிஸா மாநிலத்தின் கட்டாக் பாரமதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து 304
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கிய பில் சால்ட் 26 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர்.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டிய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதன் பின், ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர்.
திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!
இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 31 ரன்களிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 72 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில், லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ரோஹித் சர்மா சதம்
பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
6 ஓவர்களில் விளையாடி கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த உயர்கோபுர மின் விளக்கில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் சில மணிநேரம் ஆட்டம் தடைபட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கியது அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அரைசதம் விளாசினர். கில் 60 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த விராட் கோலி 5 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றமளித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக சரியாக விளையாடாத ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். 90 பந்துகளில் 119 ரன்களுக்கு (7 சிக்ஸர், 12 பவுண்டரி) பெவிலியன் திரும்ப ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 44 ரன்கள் விளாசினார். கேஎல். ராகுல், ஹார்திக் பாண்டியா தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்திய அணி 44.3 ஓவர்களில் 308 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் இருக்கிறது.
இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற 12 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.