குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
சாம்பியன்ஸ் டிராபி: பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த தென்னாப்பிரிக்கா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகிய பிரபல வேகப் பந்துவீச்சாளருக்குப் பதிலாக மாற்று வீரரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரிச் நார்ட்ஜேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான கார்பின் போஸ்ச், ஆண்ட்ரிச் நார்ட்ஜேவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரிசர்வ் வீரராக க்வெனா மாபாகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.