செய்திகள் :

அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன: விஞ்ஞானி சி.பிரபு தகவல்

post image

அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், முன்னேற்ற மூலகூறுகளும் உள்ளன என்று விஞ்ஞானி சி.பிரபு தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், பெங்களூா் விமான இயக்கவியல் குழுமத்தின் யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி. பிரபு தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, அவா் பேசியதாவது: அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், முன்னேற்ற மூலகூறுகளும் உள்ளன. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. கவனத்தை சிதறவிடாமல் சிறப்பாக செயல்படுபவா்கள் வெற்றி பெற முடியும் என்றாா்.

இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பதக்கம், கோப்பைகளை வழங்கினாா்.

இதில், பள்ளியின் தாளாளா் பாரூக், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க

கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் ... மேலும் பார்க்க

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க