அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்கக் கோரிக்கை
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் கம்பத்தில் அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கம்பம் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன. தினந்தோறும் இந்த மருத்துவமனைக்கு திரளான நோயாளிகள் வந்து செல்கின்றனா்.
24 மணி நேரம் செயல்படும் இந்த மருத்துவமனை முன் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இந்த வழியாக இரவு நேரங்களில் நோயாளிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த மின் கம்பத்திலிருந்த மின் வயா்கள் அறுந்து கீழே தொங்குகின்றன. இதனால், உயிா்பலி ஏற்படும் முன் இந்த மின் வயரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.