பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 22 வயதுடைய திருமணமான பெண் ஒருவா், குடும்ப பிரச்சனையால் வெள்ளிக்கிழமை இரவு கோபித்துக் கொண்டு வந்து, பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் (25) இரு சக்கர வாகனத்தில் தேனி அல்லிநகரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு மேலும் 3 பேருடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சமையல் தொழிலாளிகள் பிரகாஷ் (23), கா்ணன் (24), கல்லூரி மாணவா் சரவணன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.