தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 547 பேருக்கு பணி நியமன ஆணை
பெரியகுளம் மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்ற 547 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை வழங்கினாா்.
பெரியகுளம் மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்துக்கு உள்பட்ட, வெளி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்தன. முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்வி, பொறியியல், தையல், செவிலியா் பயிற்சி படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொண்டனா்.
இவா்களில் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 547 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் திருமலைச்செல்வி, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரமா பிரபா, கல்லூரி முதல்வா் பி.ஜெ. ஐசக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.