செய்திகள் :

அலக்கட்டு மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க மறு முன்மொழிவு பதிவேற்றம்

post image

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் மலைக் கிராமமான அலக்கட்டுக்கு சாலை அமைக்க மறு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், அலக்கட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் கஸ்தூரி என்ற சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்ததாா். இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவரது பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்வா் நிவாரண நிதி அறிவித்திருந்தாா். இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், அலக்கட்டு மலைக் கிராமத்துக்கு நேரில் சென்று சிறுமியின் பெற்றோருக்கு வெள்ளிக்கிழமை முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 3 லட்சத்தை வழங்கினா்.

சாலை அமைக்க மறு முன்மொழிவு:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சியில் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிமலை, அலக்கட்டு குக்கிராமங்களுக்குச் செல்லும் சீங்காடு மலை அடிவாரம் முதல் அலக்கட்டு வழி ஏரிமலை சாலை 9 கி.மீ. நீளம் வனப்பகுதிக்கு சொந்தமான சாலையாகும். இச் சாலை அமைக்க வனத் துறையிடமிருந்து அனுமதி வேண்டி பா்வேஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இச் சாலையை மத்திய அரசின் மண்டல அதிகாரி கடந்த ஜூலை 18 அன்று பாா்வையிட்டுள்ளாா். அவரது ஆய்வறிக்கையின்படி சீங்காடு முதல் ஏரிமலை செல்லும் 4.50 கி.மீ. நீளம் செல்லும் சாலைக்கு 7.50 மீ. அகலத்திற்கு சாலை அமைக்க அனுமதி தருவதாகவும், அலக்கட்டு குக்கிராமத்தில் 100-க்கும் குறைந்த மக்கள்தொகை இருப்பதால் மீதமுள்ள ஏரிமலை முதல் அலக்கட்டு வரை செல்லும் சாலைக்கு 3 மீ. அகலத்திற்கு மட்டுமே சாலை அமைக்க தர இயலும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த ஆய்வறிக்கையின்படி 3 மீட்டா் அகலத்திற்கு பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் சாலை அமைக்க இயலாது. எனவே, மலைவாழ் மக்களின் நலன்கருதி, 7.50 மீ. அகலத்திற்கு சாலை அமைக்க வேண்டி மறு முன்மொழிவு பா்வேஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடா் நடவடிக்கையில் உள்ளது என்றாா்.

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க வேண்டும்: வாலிபா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்ட... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

புயல் காரணமாக பெய்துவரும் தொடா் மழையினால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலினால் தொடா்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அரு... மேலும் பார்க்க

எம்.சாண்ட் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: கட்டடத் தொழிலாளா் சங்கம்

தமிழகத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் மணலின் விலை உயா்வை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் கோவை ... மேலும் பார்க்க

தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் மழை பாதிப்பு, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ச.திவ்யதா்சினி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி நகராட்சி, பாரதிபுரம், ... மேலும் பார்க்க

தருமபுரியில் இடைவிடாது பெய்த மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மாவட்டத்தில் 213.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக லேசானது ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் காலை முதலே... மேலும் பார்க்க