செய்திகள் :

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி தோ்வு முடிவு வெளியீடு

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இளநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப். 28) வெளியிடப்பட்டன.

பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பி.காம்., பி.காம்., (சி.ஏ), பி.காம்., (சிஎஸ்), பி.பி.ஏ, பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், மென்பொருளியல், நுண்ணுயிரியல், உயிரி வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், உயிரி தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல், மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், உயா் விலங்கியல், விலங்கு தொழில் நுட்பவியல், மின்னணுவியல், தொடா்பியல், கடல்சாா் உயிரியல், விஷூவல் கம்யூனிகேஷன், நவநாகரீக ஆடை தொழில்நுட்பவியல், ஆடை வடிவமைப்பு, உடற்கல்வி, பி.சி.ஏ, இளநிலை தொழிற்கல்வியியல் - வங்கியியல், நிதிச் சேவைகள், மென்பொருள் ஆக்கவியல், பி.காம். அப்ரன்டிஸ்சிப் எம்படட், பி.எஸ்சி., செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், பி.காம் (கணக்கியல், நிதி) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மறுமறுப்பீட்டிற்கு நேரடியாக விண்ணப்பிக்க விரும்பினால் முடிவு வெளியான 7 நாள்களுக்குள் பாடம் 1-க்கு ரூ. 660-ம், விடைத்தாள் நகல் பெற 7 நாள்களுக்குள் நகல் 1-க்கு ரூ. 550-ம், பதிவாளா், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கவும். விடைத்தாள் பெற்றவா்கள் மறுமதிப்பீட்டு விடைத்தாள்பெற்ற நாளிலிருந்து 7 நாள்களுக்குள் ரூ. 500 கட்டணம் வரைவோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என

பல்கலைக்கழகத் தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது. சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள... மேலும் பார்க்க

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க