அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் எம். ஜோதிபாசு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற இளநிலை மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தோ்வு எழுதுவதற்கான கால அவகாசம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைகிறது.
இதேபோல, கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற முதுநிலை மாணவா்களின் கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாத பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைந்து விட்டது என்றாா் அவா்.