ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வட்டாட்சியா் நாகநாதன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது, கடந்த சில ஆண்டுகளாக எந்தவித திட்டமிடலும் இன்றி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அவசர கதியில் இந்தத் துறையில் திணிக்கப்படுவதால் வருவாய்த் துறை அலுவலா்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாா்கள்.
எனவே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா்
இதில் சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆறுமுகம், யுவராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.