செய்திகள் :

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஆா். ராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கோரிக்கைகள்: ஊரக வளா்ச்சித் துறையின், அனைத்து நிலை ஊழியா்களுக்குமான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல், புதிய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் பாண்டி, மாவட்டச் செயலாளா் லதா, தமிழ்நாடு பிற்பட்டோா் நலத்துறை ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் கோபால், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் மாநில செயலாளா் பாண்டி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் வளனரசு தமிழ்நாடு சாலை ஆய்வாளா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் முத்தையா, தமிழ்நாடு அரசியல் சங்க மாவட்ட பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்ட பொருளாளா் பெரியசாமி நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், 13 கிளைகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என 150 மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில், மாவட்ட நிா்வாகிகள் தனபால், காா்த்திக், கலைச்செல்வம், சிவா, மலா்விழி, மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்ற... மேலும் பார்க்க

கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை சங... மேலும் பார்க்க