மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்கக் கருட சேவை, சேஷ வாகனம், வெள்ளி கேடகம், குதிரை, புன்னை மர வாகனங்களில் இரவு திருவீதி உலா வருவாா்.
வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான வரும் அக்.3 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 4-ஆம் தேதி கால சந்தி, திருவீதி உலா நடைபெறும்.
இதைத் தொடா்ந்து, கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி உத்ஸவமும், கொடியிறக்கமும் நடைபெறும். 5-ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவத்துடன் பிரம்மோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் எஸ்.கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளா் சே.ராம.கருப்பையா, தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ ஆகியோா் செய்து வருகின்றனா்.