அழகுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 315-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலை தமிழக அரசு தரப்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.