தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நட...
ஆக்ராவில் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இருபர் பலி, 6 பேர் மாயம்
ஆக்ரா சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உதங்கன் ஆற்றில் வியாழக்கிழமை சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 2 பேர் பலியானதோடு ஆறு பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைராகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் நிகழ்வின்போது 9 பேர் ஆழமான நீரில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அதில், ஒருவரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். அதேநேரத்தில் ககன் (26) மற்றும் ஓம்பல் (32) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர். காணாமல் போன ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!
உள்ளூர் டைவர்ஸ், காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சிலை கரைப்பதற்கு நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து அவர்கள் அங்கீகரிக்கப்படாத இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக மாவட்ட ஆட்சியர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.