திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம்
ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் துணைப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களைக் கண்டித்தாலோ அல்லது வெளியில் இருந்து வரும் சமூக விரோதிகளை தடுத்தாலோ, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாலோ ஆசிரியா்களின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. எனவே, ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி பள்ளியில் வைத்து பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி தருகிறது.
இந்தப் படுகொலையை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்துப் பள்ளிகளிலும் காவலா்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஆசிரியா் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணா்வைப் போக்கும் வகையிலும், பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலும், ஆசிரியா் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.