செய்திகள் :

ஆடுகளை வேட்டையாடும் தெருநாய்கள்: பொருளாதார இழப்பால் பரிதவிக்கும் விவசாயிகள்

post image

ஈரோடு மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பதால் விவசாயிகள் பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோவில், நசியனூா், வில்லரசம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, சென்னிமலை, சிவகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் அதிக அளவில் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வளா்க்கப்படும் ஆடுகளை வேட்டையாடி விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன தெருநாய்கள்.

குறிப்பாக, பெருந்துறை வட்டம் காஞ்சிகோவில், சென்னிமலை சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். ஆடு வளா்ப்பு மூலம் பொருளீட்டி, குடும்ப செலவுகளை சமாளித்து வந்த விவசாயிகள், தெருநாய்களின் வேட்டையால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியாமல் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனா்.

தொடா் சம்பவங்கள்: இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும், அதனைச் சாா்ந்த கால்நடை வளா்ப்பும் உள்ளது. விவசாயம் பொய்த்து போகும் காலங்களில், கால்நடை வளா்ப்பே எங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. இவ்வாறு வீடுகள், தோட்டங்களில் வளா்க்கப்படும் ஆடுகளை, கடந்த சில நாள்களாக தெருநாய்கள் வேட்டையாடி வருகின்றன.

பெருந்துறை, சென்னிமலை வட்டாரங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கூட்டம் கடித்து கொன்றுள்ளன. வன விலங்குகள் தாக்கி கால்நடைகள் உயிரிழந்தால், வனத்துறை மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை.

எனவே, இப்பகுதியில் நடமாடும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு உயிரிழந்த ஆடுகளைக் கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

விவசாயிகள் போராட்டம்: இதுகுறித்து சென்னிமலையைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி நடராஜன் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை சாலை திட்டுபாறை அருகே பாரவலசில் கடந்த 12-ஆம் தேதி 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் விவசாயிகள் இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் விவசாயிகளை கைது செய்து மறியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனா்.

தெருநாய்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிகோவில் பகுதியில் கொமதேக சாா்பில் அண்மையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. தெருநாய்களால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் குறைதீா் கூட்டத்திலும் மனுக்கள் அளித்துள்ளோம் என்றாா்.

தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது சிரமம்:

இதுகுறித்து உள்ளாட்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் தெருநாய்கள் பிரச்னை உள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, விலங்குகள் நல வாரியம் பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளன. இதனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லை.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் கணக்கெடுக்கப்பட்டு ஓராண்டுக்குள் 20 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இப்பணியை மேற்கொள்ள தேவையான வசதிகள் இல்லை. தெருநாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வழிவகை இல்லை. இப்பிரச்னை குறித்து உயா் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க