ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
கம்பம் அருகே வெள்ளிக்கிழமை சாலையோரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், க.புதுப்பட்டி சன்னாசியப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் விஜய் (28). ஆட்டோ ஓட்டுநரான இவா், கம்பத்திலிருந்து க.புதுப்பட்டிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றாா். தனியாா் பள்ளி அருகே சென்றபோது, ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸாா் விஜயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.