கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
ஆதி திராவிடா் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற நவ.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரையிலான ஆதி திராவிடா் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள பதவிகள் குறித்த விபரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் தொடா்புக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ளவா்கள் வருகிற நவ.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேனி மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.