செய்திகள் :

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

post image

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...

ரூபாய் நோட்டுகள் வேண்டாம்!

"இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய தொகை கொண்ட பண நோட்டுகள் நமக்கு வேண்டாம். அப்போது தான் நாட்டில் இருந்து ஊழலை அழிக்க முடியும்.

நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அழிக்கச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நானே. இப்போது ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை கொண்டு வந்துள்ளனர். அதையும் அழிக்க வேண்டும்.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அவர்கள் புதிய பண நோட்டுகளை வழங்கி வருகிறார்கள்.

ஊழல்கள்...

அரசியலில் நடக்கும் ஊழல்களை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது கட்டுக்கதை. தெலுங்கு தேசக் கட்சி தொடர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. மேலும், பல லட்ச கோடி ஊழல்களை நம் கட்சி சி.பி.ஐ போல வெளி கொண்டு வந்துள்ளது.

சந்திரபாபு
சந்திரபாபு நாயுடு

நாம் என்ன நினைக்கிறோமோ...

'ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்' என்பது பல முறை நிரூபணமாகி உள்ளது. இந்தியாவில் முன்னோடி நிர்வாக மாதிரிகளான மின் சீர்திருத்தங்கள், பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் நிர்வாக பொறுப்புக்கூறலை நாம் தான் அறிமுகப்படுத்தினோம்" என்று பேசியுள்ளார்.

``தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' - முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

மும்பை தாராவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் நீண்ட இழுபறிக்கு பிறகு தீவிரம் அடைந்திருக்கிறது. மாநில அரசு இத்திட்டத்தை செ... மேலும் பார்க்க

US Tariffs: `ட்ரம்ப் அதிகாரத்தை மீறுகிறார்' நீதிமன்றம் குட்டு; `இது அரசு முடிவு' -ட்ரம்ப் முரண்டு

'பரஸ்பர வரி' என்று உலகில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை விதித்து அதிர்ச்சியை தந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது அதிர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல், அறிவிக்கப்பட்ட ஒ... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகும் எலான் மஸ்க்; ட்ரம்ப் - மஸ்க் மனக்கசப்பு காரணமா?

எதிரும் புதிருமாய் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கைக்கோர்த்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ட்ரம... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?

Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும்அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றி... மேலும் பார்க்க

``காசாவின் ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு; தோல்வி முகத்தில் ஹமாஸ்..'' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - காசா போர் இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதுவரை இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த மோதல்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இஸ்ரேல் தான் முதலில் தாக்குத... மேலும் பார்க்க