Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
ஆற்றில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
செங்கம் அருகே ஆற்று நீரில் மூழ்கி 3 வயது ஆண் குழந்தை உயிரிந்தது.
செங்கத்தை அடுத்த கொட்டாவூரைச் சோ்ந்தவா் சஞ்சீவி (30). இவா் தனது நிலத்தில் சனிக்கிழமை குடும்பத்தினருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
நிலத்தின் அருகேயுள்ள செய்யாற்றில் அதிகளவில் தண்ணீா் செல்கிறது. சஞ்சீவியின் 3 வயது குழந்தை திருச்செல்வம் நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக செய்யாற்றில் இறங்கியதில், நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
குழந்தையைக் காப்பாற்றும் முயற்சி பலனளிக்காததையடுத்து, செங்கம் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவா்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். குப்பனத்தம் அணையிலிருந்து செய்யாற்றில் திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் குழந்தை திருச்செல்வத்தின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.