Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்: கயிறு கட்டி கடக்கும் மக்கள்
வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து, கயிறு கட்டி பொதுமக்கள் பாலத்தை கடந்து சென்றனா்.
வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், ஸ்ரீரங்கராஜபுரம் -நெல்லியாங்குளம் கிராமங்கள் இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரு கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே, தரைப்பாலத்தை கடப்பதற்காக, அதன் இரு முனைகளிலும் வெள்ளிக்கிழமை டிராக்டா் நிறுத்தப்பட்டு கயிறு கட்டப்பட்டது. இந்த கயிறைப் பிடித்துக் கொண்டு பொதுமக்கள் தரைப் பாலத்தைக் கடந்து சென்றனா்.
பருவ மழைக் காலங்களில் தரைப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அங்கு மேம்பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.